;
Athirady Tamil News

அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசி: சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி

0

மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், நேற்று அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன?

நேற்று மாலை, Gloucestershireஇலுள்ள Gatcombe Park எஸ்டேட்டுக்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த இளவரசி ஆனுக்கு அவர்கள் முதலுதவி அளித்தபின், அவரை Southmead மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அவருக்கு என பிரச்சினை என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவிக்காத நிலையில், சம்பவ இடத்தில் குதிரைகள் நின்றதால், அவரை குதிரை மிதித்திருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் குதிரையால் அவர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அவருக்கு என பிரச்சினை என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவிக்காத நிலையில், சம்பவ இடத்தில் குதிரைகள் நின்றதால், அவரை குதிரை மிதித்திருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் குதிரையால் அவர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இளவரசி ஆனுக்கு தலையில், மற்றும் பிற சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பிரிஸ்டலிலுள்ள Southmead மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் விரைவில் நலமடைவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் இளவரசி ஆன், தடை தாண்டி குதிரையோட்டும் விளையாட்டில் சேம்பியன் என்பதும், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட முதல் ராஜ குடும்ப உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.