;
Athirady Tamil News

100 ஆண்டுகளுக்கு பயமில்லை… நாசா கூறும் நல்ல செய்தி: ஆனால்

0

சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் பூமியை நோக்கி வருவதைக் குறித்த செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துபவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கால்பந்து மைதானம் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது என்றொரு செய்தி வெளியானால் பயப்படாதவர்கள் யாராவது இருப்பார்களா?

100 ஆண்டுகளுக்கு பயமில்லை
ஆனால், இனி வரும் 100 ஆண்டுகளுக்கு சிறுகோள்கள் குறித்த பயம் தேவையில்லை என்று கூறியுள்ளது நாசா.

சமீபத்தில் நாசா மேற்கொண்ட ஆய்வுகள், அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த பெரிய சிறுகோளும் (asteroids) இருப்பதாக தெரியவரவில்லை என நாசா ஆய்வாளர்களில் ஒருவரான Terik Daly என்பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், விடயம் என்னவென்றால், ஒரு சிறிய சிறுகோள் பூமியின் மீது வந்து மோதினால்கூட, அது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்கிறார் முன்னாள் ஆய்வாளர்களில் ஒருவரான Lindley Johnson என்பவர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.