;
Athirady Tamil News

இலங்கைக்கு கொண்டாட்டதுடன் வரவேற்கப்பட்ட விமானம்!

0

சோங்கிங் ஏர்லைன்ஸ், சீனாவின் சோங்கிங்கில் இருந்து கொழும்புக்கு நேரடி இடைவிடாத விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள்
குறித்த விமானம் நேற்று(24.06.2024) பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை (Bandaranaike International Airport) வந்தடைந்தவுடன் விமானம், கொண்டாட்டமான நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது.

சோங்கிங்கில் இருந்து கொழும்புக்கு OQ2393 என்ற தொடக்க விமானம் 78 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 2:50 மணிக்கு வருகை தந்துள்ளது.

வரவேற்பு
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சியின் மூலம் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளனர்.

சோங்கிங் மற்றும் கொழும்பு இடையே வாராந்திர மூன்று விமானங்கள் இயக்கப்படும் அதே வேளையில் Acorn Aviation (Private) Limited இலங்கையில் Chongqing Airlinesக்கான பொது விற்பனை முகவராக (GSA) உள்ளது.

இலங்கையில் சோங்கிங் ஏர்லைன்ஸ்(Chongqing Airlines) செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமானது, இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, நிதி, கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என AASL தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.