உலகின் தனிமையான செடி., துணையைத் தேடும் AI
உலகின் தனிமையான தாவரத்தை இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு பெண் செடி இந்த ஆண் செடிக்கு துணையாக தேடப்படுகிறது. இந்த வேலைக்கு செயற்கை நுண்ணறிவும் (AI) பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்தின் பெயர் என்செபலார்டோஸ் வூடி (Encephalartos woodii). சைக்காட் (Cycad) இனத்தைச் சேர்ந்தது.
இந்த வகை மரங்கள் டைனோசர்களுக்கு முன்பிருந்தே பூமியில் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள கோயே வனப்பகுதியில் இந்த அரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அழிந்து வரும் இந்த தாவரம் இயற்கை முறைகள் மூலம் மீண்டும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் செடி தேவைப்படுகிறது. இதற்காக கோயே வனப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் சல்லடை போடப்பட்டு வருகிறது.