;
Athirady Tamil News

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு

0

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25.06.2024) திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் அவர்கள் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்துச் சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.