;
Athirady Tamil News

அனலைதீவு போராட்டம்

0

அனலைதீவில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு அப்பகுதி மக்கள் கடற்போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர்.

அனலைதீவு இறங்குதுறையின் பாதுகாப்பை மையமாக கொண்டு கடலரிப்பால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் அகற்றப்படும் இடிபாடுகளை அனலைதீவு இறங்குதுறையின் கரையோர பகுதியில் கொட்டிவருகின்றனர்.

கொட்டப்படும் இடிபாடுகளால் இறங்குதுறையின் இரு கரைப் பகுதியும் சற்று அகலமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடல் பகுதி நிரவப்படுவதாக தெரிவித்து துறைசார் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து குறித்த திணைக்களம் கடலில் கட்டட இடிபாடுகளை கொட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறியுள்ளதுடன் கொட்டப்பட்ட இடிபாடுகளை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்தே அனலைதீவை சேர்ந்த சிலர் தாம் முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டை தடுத்தைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

அத்துடன் குறித்த இறங்குதுறையின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை அவரது யாழ் மாவட்ட பிரதிநிதிகளிடம் கையளித்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கூறியுள்ளதுடன் விரைவில் தான் நேரில் வருகைதந்து அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினைகள், அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் கிடைக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.