அகதிகளை திருப்பி அனுப்பக் கோரும் ஜேர்மன் எதிர்க்கட்சிகள்: மாறிவரும் மன நிலை
பல நாடுகளில், புலம்பெயர்ந்தோர், அகதிகள் குறித்த மன நிலை பெருமளவில் மாறிவருகிறது. அது பிரித்தானியாவானாலும் சரி, கனடாவானாலும் சரி, பிரான்ஸ் ஆனாலும் சரி.
சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் முன்னேறிவரும் கட்சிகள் பல, வலதுசாரி அல்லது புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிகள் ஆகும். அந்தக் கட்சிகளிடம் புலம்பெயர்தல் எதிர்ப்பு என்னும் மன நிலை காணப்படுவது அவர்கள் கூற்றிலிருந்து தெரியவருகிறது.
உக்ரைன் அகதிகளை திருப்பி அனுப்பக் கோரும் எதிர்க்கட்சிகள்
ஜேர்மனியிலும் அதே மன நிலை உருவாகிவருகிறது. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் பெருமளவில் வாக்குகளைப் பெற்ற வலதுசாரிக் கட்சிகள் முதலான எதிர்க்கட்சிகள் சில, உக்ரைன் அகதிகளை, உக்ரைனுக்கே திருப்பி அனுப்பவேண்டுமென கோரி வருகின்றன.
பவேரியாவின் Christian Social Union (CSU) கட்சியின் முன்னணி உறுப்பினரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) என்பவர், உக்ரைனியர்கள் ஜேர்மனியில் வேலை தேடிக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் அவர்களை உக்ரைனுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்ரைனிலும் பாதுகாப்பான இடங்கள் உள்ளன, ஜேர்மனியில் வேலை தேடிக்கொள்ளாத உக்ரைன் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று கூறியுள்ளார் அலெக்சாண்டர்.