;
Athirady Tamil News

பிரித்தானியாவில் ஆண்களை தாக்கும் வைரஸ்

0

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புதிய கொரோனாவைரஸ் பெண்களைவிட ஆண்களை எளிதாக தொற்றிக்கொள்வது தெரியவந்துள்ளது. கொரோனாவைரஸின் அறிகுறிகள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், தற்போதைய அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக உடல் சூட்டுடனான குளிர் காய்ச்சல், புதிதாக உருவாகியுள்ள அறிகுறியான தொடர் இருமல், சுவை, வாசனை அறிவதில் மாற்றம் அல்லது இழப்பு, மூச்சுத்திணறல், சோர்வாக உணர்தல், உடல் வலி, தலைவலி, தொண்டை அழற்சி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, எப்போதும் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகள் என பிரித்தானிய மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.