நிலவில் உள்ள தூசிகளுடன் பூமியை வந்தடைந்த சீனாவின் Chang’e 6 – ஆய்வு பணிகள் ஆரம்பம்!
நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக சீனாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த Chang’e 6 என்ற விண்ணோடம் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பூமியை வந்தடைந்த Chang’e 6
விண்வெளியில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து, Chang’e 6 விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.
குறித்த விண்கலமானது சீனாவின் வடக்குப் பகுதியான இன்னர் மங்கோலியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
சீன விண்கலம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதிகாலை 1:41 மணிக்கு சீன விஞ்ஞானிகள் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இதுவே பூமிக்கு திரும்பிய முதல் சந்திரனின் தூர மாதிரிகள் ஆகும்.
Everything is ready for the arrival of the Chang’e 6 Moon samples in the next few hours. #Change6 #China pic.twitter.com/2gKA33UhQZ
— Space Intelligence (@SpaceIntel101) June 24, 2024
சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (CNSA) தலைவர் ஜாங் கேஜியன், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, Chang’e 6சந்திர ஆய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் Chang’e-6 ஆய்வு, சந்திரனின் தொலைதூரப் பக்கத்திலிருந்து 2 கிலோகிராம் நிலவு தூசி மற்றும் பாறைகளுடன் பூமிக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.