;
Athirady Tamil News

12வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்! ரகசியத்திற்கு அளித்த விளக்கம்

0

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது 12வது குழந்தையை வெளிப்படுத்தாததன் காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

12வது குழந்தை
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், தனது துணைகள் மூலமாக 11 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார்.

ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஸ்க் 12வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும், அதனை ரகசியமாக வைத்துள்ளார் என்றும் Bloomberg தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டது.

மஸ்க்கின் நியூராலின்க் நிறுவனத்தின் மேலாளர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் மூலம் இந்த 12வது குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது இந்த தம்பதிக்கு மூன்றாவது குழந்தை ஆகும். கடந்த 2021யில் இவர்களுக்கு ஸ்டிரைடர் – ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

மஸ்க் விளக்கம்
இந்த நிலையில் Bloombergயின் அறிக்கைக்கு எலான் மஸ்க் (Elon Musk) தற்போது விளக்கம் அளித்துள்ளார். 12வதாக பிறந்த குழந்தை உண்மைதான் என உறுதிப்படுத்தியுள்ளார் மஸ்க்.

மேலும், அவர், ”குழந்தை பிறந்தது ரகசியமாக வைத்ததாக கூறுவது சரியில்லை. குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். ஊடகத்திடம் அதை வெளிச்சம்போட்டு கூறவில்லையே தவிர, இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

காதல் விவகாரங்களில் பல பெண்களுடன் மஸ்க்கிற்கு நெருக்கம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6 குழந்தைகளுக்கு அவர் தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.