சிக்கன் கபாப், மீன் வறுவல் உணவுகளில் ரசாயன பொடி..பயன்படுத்த தடை -அரசு அதிரடி உத்தரவு!
சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரசாயன பொடி தடை
கர்நாடகத்தில் சமீபத்தில் பஞ்சு மிட்டாய், கோபிமஞ்சூரியன் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ண பொடி புற்று நோய் உண்டாகும் என கண்டறியப்பட்டது.இதனால் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் ரசாயன பொடி பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சிக்கன் கபாப் உள்ளிட்ட எண்ணெயில் பொறிக்கப்படும் சிக்கன் துண்டுகள், மீன் வறுவலுக்கு பயன்படுத்தப்படும் வண்ண பொடியிலும் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்குவதாக புகார் எழுந்துள்ளது.
அதிரடி உத்தரவு
இதனையடுத்து, சிக்கன் கபாப், மீன் வறுவல்களில் இந்த உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொடிகளை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட அந்த வண்ண பொடிகளை உபயோகித்தால் அந்த கடைகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக சாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த கர்நாடக அரசு தற்போது சிக்கன் கபாப், மீன்வறுவல் உள்ளிட்டவற்றில் ரசாயன பொடி பயன்படுத்த தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.