தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு… அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்றம்!
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகவே நாடாளுமன்றம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் ஜனாதிபதியின் அறிக்கையுடன், இலங்கையின் பொருளாதார நிலை, வங்குரோத்து நிலை போன்ற விடயங்கள் தொடர்பிலும் அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும் நாடாளுமன்றம் வழமை போன்று 9ஆம் திகதி கூடவிருந்த நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.