;
Athirady Tamil News

இலங்கை அதிபர் தேர்தல்: பொன்சேகா யாருக்கு ஆதரவு!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன்(Sajith Premadasa) முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தற்போது அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

கெசினோகாரர்களின் பணத்தை வைத்து பாடசாலைகளுக்குப் பொருட்கள் வழங்குபவர்களை நாட்டின் அதிபராக்கினால் நாடு அழிந்து விடும் என்று பொன்சேகா கடந்த நாடாளுமன்ற அமர்வில் சஜித்தை மறைமுகமாகப் போட்டுத் தாக்கியிருந்தார்.

இதன் மூலம் பொன்சேகா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.

பொன்சேகா யாருக்கு ஆதரவு
அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவார் என்று ஒரு தரப்பும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று இன்னொரு தரப்பும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக சரத் பொன்சேகா (Sarath Fonseka) களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.