சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாவது போதைக்கு அடிமையாவதை போன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களின் நடத்தை
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பிள்ளைகள் இணையத்தில் இருந்தால் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் மிக அதிகம். இணையத்திற்கு கடுமையாக அடிமையாகி இருக்கும் பிள்ளைகள் இருந்தால், அவர்களை கைத்தொலைபேசியில் இருந்து முற்றாக நீக்குவது அவசியம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி மற்றும் கணினி வழங்கக்கூடாது. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெற்றோரின் கடுமையான கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என ரூமி ரூபன் கூறியுள்ளார்.
கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையானவர்களுக்கு இவ்வாறான சாதனங்களை வழங்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி, கணனி போன்றவற்றுக்கு அதிகம் அடிமையானால் முதல் நிலையிலேயே அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள் வீடியோ கேம்களுக்கு அதிகம் அடிமையாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் திட்டம்
தொடர்ந்து வீடியோ கேம்களை பார்ப்பதன் மூலம் சிறுவர்களின் நடத்தை வன்முறையாக மாறுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக ரூபன் கூறியுள்ளார்.
இதுபோன்ற செயல்களுக்கு அடிமையான பிள்ளைகள், பெற்றோர்களை கூட அவர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் மற்றும் வீடியோ கேம்களில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற சிறப்பு அறிவியல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.