;
Athirady Tamil News

காஸா போருக்காக இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுத ஏற்றுமதி செய்த ஆசிய நாடு: வெளியான தரவுகள்

0

ஹமாஸ் படைகளுக்கு எதிராக காஸா மீது போர் தொடுத்த இஸ்ரேலுக்கு ரகசியமாக இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் துறைமுகத்தில்
தொடர்புடைய ஆவணங்களை முதன்மையான செய்தி ஊடகம் ஒன்று பார்வையிட்டு உறுதி செய்துள்ளது. கடந்த மே 15ம் திகதி விடிகாலையில் ஸ்பானிய கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது.

அதே வேளை பாலஸ்தீன கொடிகளை ஏந்தி துறைமுகத்தில் திரண்ட மக்கள், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கப்பலை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரி உறுப்பினர்கள் சிலர் ஸ்பெயின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தொடர்புடைய கப்பலானது ஸ்பெயின் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரியிருந்தனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றப்பட்ட கப்பலை அனுமதிப்பது என்பது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக தற்போது விசாரணையில் உள்ள ஒரு நாட்டிற்கு ஆயுதங்களை கொண்டு செல்வதை அனுமதிப்பதாகும் என அந்த 9 உறுப்பினர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே அந்த கப்பல் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தற்போது வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த கப்பலில் இந்தியா அனுப்பிய ஆயுதங்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு குண்டுகள்
ஏப்ரல் 2ம் திகதி சென்னையில் இருந்து தொடர்புடைய கப்பலானது இஸ்ரேல் நோக்கி புறப்பட்டுள்ளது. அதில், 20 டன் ராக்கெட் என்ஜின்கள், வெடிக்கும் தன்மை கொண்ட 12.5 டன் ராக்கெட்டுகள், 1,500 கிலோ வெடிப் பொருட்கள், 740 கிலோ பீரங்கிகளுக்கான வெடிப் பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

மே 21ம் திகதி மீண்டும் சென்னையில் இருந்து ஆயுதங்களுடன் புறப்பட்ட கப்பலானது ஸ்பெயின் துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 27 டன் வெடிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம், மோதல்களைத் தீர்ப்பதில் இராணுவ நடவடிக்கை தீர்வல்ல என்று நீண்டகாலமாக ஆதரிக்கும் ஒரு நாட்டில் இருந்து ஆயுதங்கள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது என்றே கூறுகின்றனர்.

மேலும், ஜூன் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கூடாரங்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு என்றே அம்பலமாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.