14 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலியன் அசாஞ்சே விடுதலை., அமெரிக்கா விதித்த தடை
14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) சொந்த நாட்டுக்கு திரும்புகிறார்.
ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவுடன் முதற்கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அதன்படி, அவர் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் (Northern Mariana Islands) உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு, அசாஞ்சே விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தை விட்டு சுதந்திரமாக வெளியேறினார். நீண்ட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை
இத்தனை ஆண்டுகளாக பிரித்தானிய சிறையில் இருந்த அசாஞ்சே நேற்று முன் தினம் அமெரிக்க நீதிமன்றத்துக்குச் சென்றார்.
இருப்பினும், அமெரிக்க நீதிமன்றம் அசாஞ்சேக்கு எந்த தண்டனையும் விதிக்கவில்லை. இதன் மூலம் அவர் தனது சொந்த நாடான அவுஸ்திரேலியா செல்கிறார். குறிப்பாக தலைநகர் Canberra-விற்கு செல்கிறார்.
பிரித்தானிய சிறையில் 5 ஆண்டுகள்
லண்டனில் ராணுவ தகவல்களை கசியவிட்டதற்காக அசாஞ்சேக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தேசத் துரோக வழக்கில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்தார் அசாஞ்சே.
அசாஞ்சே ஐந்து ஆண்டுகள் பிரித்தானிய சிறையில் இருந்தார். அதற்கு முன், அவர் ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகள் கழித்தார்.
அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே விடுவிக்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அமெரிக்காவுக்குள் நுழைய தடை
அசாஞ்சேயின் விடுதலை குறித்து அமெரிக்க நீதித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தக் குறிப்பில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், அசாஞ்சே அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.