நாதஸ்வர வித்துவான் கலாநிதி பஞ்சாபிகேசனுக்கு திங்கள் சாவகச்சேரியில் நூற்றாண்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் 2010 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட நாதஸ்வர வித்துவான் எம். பஞசாபிகேசனின் நூற்றாண்டு விழா 01.07.2024 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில்; மருத்துவர் எஸ். எஸ். அருளானந்தம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் மூத்த நாதஸ்;வர தவில் வித்துவான்கள் பங்குகொள்ளும் இசைக்கச்சேரி, நாதஸ்வரம் பற்றிய சிறப்பு கட்டுரைகளை உள்ளடக்கிய எம்பஞ்சாபிகேசன் என்ற சிறப்பு மலர் வெளியீடு, பஞ்சாபிகேசன் குறித்து சான்றோர் ஆற்றும் உரைகள், மூத்த நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கான பஞ்சாபிகேசன் நினைவுத் தங்கப் பதக்கம் வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கலாநிதி பஞ்சாபிகேசன் 91 ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்தவர் என்பதுவும் தனது 85 ஆவது வயது வரை நாதஸ்வர இசைக்கச்சேரிகள் செய்த மூத்த கலைஞர் என்பதுவும் குறிப்பிடத்தக்கன.