பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் நாடு: பின்னணி
பிரான்ஸ் நாட்டுக்கு, சுவிட்சர்லாந்தின் சுவிஸ் மாகாணம் பெரும் தொகை ஒன்றை வழங்க உள்ளது.
பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் ஜெனீவா
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பிரான்ஸ் நாட்டுக்கு 372 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்க உள்ளது.
கடந்த ஆண்டும் ஜெனீவா பிரான்சுக்கு 352 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்கியது.
உண்மையில், இரு நாடுகளுக்குமிடையிலான ஒரு ஒப்பந்தத்தின்படி ஜெனீவா பிரான்சுக்கு இந்த தொகையை வழங்க உள்ளது.
அதாவது, பிரான்சிலிருந்து எல்லை கடந்து ஜெனீவாவுக்கு வந்து வேலை செய்யும் பிரான்ஸ் நாட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் ஒரு பகுதியை பிரான்சுக்கு கொடுப்பது என இரு நாடுகளும் 1973ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன.
அதன்படிதான் தற்போது ஜெனீவா பிரான்சுக்கு 372 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்க உள்ளது.
இந்த தொகையை, அத்தியாவசிய உள்கட்டமைப்பு, கல்வி, நீர் மேலாண்மை என, எல்லையின் இரு பக்கத்திலும் வாழும் மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களுக்காக பிரான்ஸ் செலவிடவேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும்.