பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள்
பிரித்தானியாவில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றின் விலை இந்த ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டூத் பேஸ்ட் முதல் ரேஸர் வரை…
பிரித்தானியாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களான டூத் பேஸ்ட் முதல், ஷேவிங் ரேஸர் வரையிலான சில பொருட்களின் விலை, இந்த ஆண்டில் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கவிருப்பதாக ஆய்வொன்றின் முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்
நுகர்வோர் ஆய்வமைப்பான Which? என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில், கோல்கேட் நிறுவனத்தின் டூத் பேஸ்ட் ஒன்றின் விலை, வெவ்வேறு பல்பொருள் அங்காடிகளில் வித்தியாசமான விலையில் கிடைப்பதாக தெரிவிக்கிறது.
ஆகவே, நீங்கள் வழக்கமாக வாங்கும் பிராண்டின் விலை குறையும்போது, தேவையான அளவு அந்த பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவோ, அல்லது, அதே போன்ற விலை மலிவான வேறொரு பிராண்ட் டூத் பேஸ்டை வாங்கிப் பயன்படுத்தவோ பரிந்துரைக்கிறது Which? அமைப்பு.
அதேபோல, நுகர்வோர் ஷேவிங் ரேஸர்களுக்கு அதிக விலை கொடுப்பதாகக் கூறும் Which? அமைப்பு, குறிப்பாக Gillette தயாரிப்புகளும் வெவ்வேறு பல்பொருள் அங்காடிகளில் வெவ்வேறு விலையில் கிடைப்பதாகவும், அவை சில நேரங்களில் பாதி விலைக்கு கிடைப்பதாகவும் கூறுகிறது.
அடுத்ததாக, ஒவ்வாமைக்கான மாத்திரைகள் இதேபோல வெவ்வேறு பல்பொருள் அங்காடிகளில் வெவ்வேறு விலைக்கு விற்கப்படுகின்றன.
அந்த அமைப்பின் ஆய்வில், பொதுவாக, Asda பல்பொருள் அங்காடியில் பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆக, நுகர்வோர் இந்த பரிந்துரைகளை கவனித்து அதன்படி விலைவாசியை எதிர்கொள்ள ஆலோசனை கூறப்படுகிறது.