ரஷ்யாவில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த ரயில்., 70 பயணிகள் காயம்
வடக்கு ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் northern republic of Komiயில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, இந்த ரயில் Vorkuta நகரத்திலிருந்து ஆர்க்டிக் வட்டம் வழியாக நாட்டின் தெற்கில் கருங்கடலில் உள்ள Novorossiysk துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
கோமி குடியரசில் உள்ள சிறிய நகரமான இன்டா அருகே ரயில் தடம் புரண்டது.
இதில் ஒன்பது பெட்டிகள் கோமி ஆற்றில் கவிழ்ந்தன. அப்போது ரயிலில் 215 பயணிகள் இருந்தனர்.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், விபத்தின் போது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சமீபத்திய விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோமி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததாக்க கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
00