;
Athirady Tamil News

ஜேர்மனி: அமுலுக்கு வந்தன புதிய குடியுரிமை விதிகள்

0

ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள், இன்று, அதாவது, ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளன.

புதிய குடியுரிமை விதிகள்
ஜேர்மன் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், இனி தங்கள் முந்தைய குடியுரிமையை துறக்கவேண்டியதில்லை.

ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது மாற்றப்பட்டு, இனி ஐந்து ஆண்டுகள் சட்டப்பூர்வமாக ஜேர்மனியில் வாழ்ந்த வெளிநாட்டவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஜேர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், கல்வியில் அல்லது தொழிலில் சிறந்து விளங்குதல், பொது வாழ்வில் ஈடுபடுதல் அல்லது அரசியலில் பங்கேற்றல் போன்ற சிறப்பு தகுதிகளையுடையோர், இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை பெறுவதை சாத்தியமாக உள்ளது.

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டு பெற்றோருக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் எதிர்காலத்தில் ஜேர்மன் குடியுரிமையைப் பெறுவார்கள்.

ஒரே நிபந்தனை, பெற்றோரில் ஒருவராவது ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக வாழ்ந்து, நிரந்தர குடியிருப்பு அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.

1960 களில் மேற்கு ஜேர்மனிக்கு வேலை செய்வதற்காக குடிபெயர்ந்த துருக்கி நாட்டவர்கள் குடியுரிமை பெற இனி தேர்வு எழுதவேண்டியதில்லை.

ஜேர்மன் குடியுரிமையைப் பெற அவர்கள் ஜேர்மன் மொழ்யில் பேசும் திறனை நிரூபித்தால் போதும்.

இதேபோல, கிழக்கு ஜேர்மனிக்கு வேலைக்காக சென்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

புதிய விதிகள் கொள்கையளவில் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர், தாங்கள் சொந்தமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் (இந்த விதி, விருந்தினர் பணியாளர் தலைமுறையை (guest worker generation) சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது).

ஜேர்மன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயக ஒழுங்குக்கான அர்ப்பணிப்பு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அவசியமாகும்.

குறிப்பாக யூத விரோத , இனவெறி அல்லது பிற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்ததாகக் கண்டறியப்பட்டவர்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளை நிராகரிப்பவர்கள் அல்லது பலதார மணம் செய்து கொண்டவர்கள் ஆகியோர் ஜேர்மன் பாஸ்போர்ட் பெற தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.