;
Athirady Tamil News

7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு? பின்னணியில் இப்படி ஒரு கதையா!

0

நடிகை தமன்னா குறித்து பாடப்புத்தகத்தில் பகுதி இடம் பெற்றுள்ள செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடப்படிப்பு
வளரும் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்று கொடுக்கிறேன் என்பது மிகவும் முக்கியத்துவமானது. அந்த வயதில் ஒரு மாணவன் என்ன கற்கிறானோ, அதுவே பின்நாளில் அவன் கவனத்தை அதிகளவில் ஈர்க்கும்.
அதன் காரணமாக தான், பள்ளி பாடங்களில் பிரபல சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு, நாட்டின் வரலாறு, சமூக வரலாறு, ஒரு துறையில் வென்றவர்களை குறித்து இருக்கும்.

இவற்றில் பெரும்பாலும், சினிமா துறையை சேர்ந்தவர்களை பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. அதற்கும் படிக்கும் வயதில் சினிமா மோகம் ஏற்பட்டு கவனம் சிதறி விட கூடாது என்ற காரணத்தால் தான்.

தமன்னா வரலாறு
ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, 7-ஆம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா குறித்து குறிப்புக்கள் இடம் பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் உள்ள சிந்தி என்ற தனியார் பள்ளி பாட திட்டத்தில் தான் இது இடம் பெற்றுள்ளது.

சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்கிற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்று உள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளிவந்து இணையத்தில் மட்டுமின்றி பலரிடம் இருந்தும் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.

இந்த சிந்தி பள்ளி என்பது தனிப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த என்பதும், தமன்னாவும் அதே சமூகத்தை சேர்ந்து பிரபலமாக உள்ளது அவரின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைத்துள்ளார்கள் என்ற கருத்துக்களும் வெளிவந்துள்ளது . ஆனால், ஏதன் காரணமாக, தமன்னாவின் வரலாற்றை பள்ளிப்பாட புத்தகத்தில் இணைந்தார்கள் என்பது குறித்த தகவல் இல்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.