இந்த இலையை மென்று சாப்பிட்டால் சுகர் குறையுமா? அற்புதம் செய்யும் கறிவேப்பிலை
நாம் அனைவரும் உணவுகளுடன் சேர்த்து கொள்ளும் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான சுவை இருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று.
வெறும் சுவைக்காக மாத்திரம் கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதில்லை. மாறாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் வழங்குகின்றது.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் செரிமானம், இதய ஆரோக்கியம். ஆரோக்கியமான தோல் மற்றும் முடி உள்ளிட்டவை பாதுகாக்கப்படுகின்றன.
அத்துடன் கறிவேப்பிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் டைப்-2 நீரிழிவுயை தடுக்கும் எனவும் கூறப்படுகின்றது.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் எப்படி டைப்-2 நீரிழிவு நோய் கட்டுபாட்டிற்குள் வருகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?
1. கறிவேப்பிலையில் வைட்டமின், பீட்டா கரோட்டின் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்துடன் தொடர்புடைய டைப்-2 நீரிழிவு நோயை கட்டுபாட்டில் வைக்கிறது.
2. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை கறிவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் திறம்பட நிர்வகிக்கின்றன. இவை நீரிழிவின் பாதிப்பை தடுக்கிறது.
3. செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்து கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. இது விரைவாக வளர்சிதை மாற்றமடையாது, அதே சமயம் இரத்த சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்கும்.
4. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாவுச்சத்து உணவுகள் சாப்பிடும் பொழுது குளுக்கோஸ் அதிகமாக வாய்ப்பு இருக்கின்றது. இந்த மாதிரியான நேரங்களில் இரத்தத்துடன் கலக்கும் குளுக்கோஸின் அளவைக் கறிவேப்பிலை கட்டுக்குள் வைக்கிறது.
5. தினமும் காலையில் 8 அல்லது 10 புதிய கறிவேப்பிலைகளை சாப்பிடலாம் அல்லது கறிவேப்பிலை இலைகளை சாறு செய்து தினமும் காலையில் குடிக்கலாம். இது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.