வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு மீண்டும் உண்மையானது
பிரேசில் நாட்டவரான எதிர்காலத்தைக் கணிக்கும் ஒருவர், இதுவரை இல்லாத வகையில் விண்வெளியில் நடக்கவிருக்கும் சில விடயங்கள் குறித்து கணித்திருந்தார். அவரது கணிப்பு மிகச்சரியாக நிறைவேறியுள்ளது.
வாழும் நாஸ்ட்ரடாமஸ்
எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் முதல், எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé, 37).
சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். அதுவும் சரியாக நிறைவேறியது. மன்னர் சிறுநீரகப் பிரச்சினை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
மீண்டும் பலித்த வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு
கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், இதுவரை இல்லாத வகையில் விண்வெளியில் சில பொருட்கள் பூமிக்கருகில் பறந்துவரும் என கணித்திருந்தார். ஆனால், அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் கூறியிருந்தார் ஏதோஸ்.
அவரது கணிப்பு துல்லியமாக நிறைவேறியுள்ளது. ஆம், Asteroid 2024 Mk என்னும் சிறுகோள் இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 16ஆம் திகதி கண்டறியப்பட்டது, அது 29ஆம் திகதி பூமிக்கருகில் கடந்து செல்ல உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
சற்று அதிக திகலூட்டும் விடயம் என்னவென்றால், Asteroid 2011 UL21 என்றொரு சிறுகோள், இன்று, பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. அது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 99 சதவிகித சிறுகோள்களையும் விட பெரியது என்பதுதான் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்!