விஷ கடிக்கு உள்ளானால் உடனே வைத்திய சிகிச்சை பெறுங்கள்
நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்தார்
விசர் நாய் கடிக்கு உள்ளான கிளிநொச்சியை சேர்ந்த 4 வயதான சிறுமி நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்நிலையில் அது தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
விசக் கடிக்கு தீண்டப்பட்டால், 5 நிமிடங்களுக்கு நீரினால் நன்றாக கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது.
ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.