;
Athirady Tamil News

கனடாவில் அதிக அளவு வதிவிட உரிமை பெற்றும் வெளிநாட்டவர்கள் : வெளியான தகவல்

0

கனடாவில் (Canada) வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அண்மைய ஆண்டுகளாக இந்த நிலை காணப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 23 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

நிரந்தர வதிவிட உரிமை

இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர்கள் முதலாவது தொழில் உரிமத்தை பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த எண்ணிக்கை 2011 முதல் 2015 ஆம் ஆண்டில் 12 வீதமாக காணப்பட்டுள்ளதுடன் அண்மைய ஆண்டுகளில் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் 2.8 மில்லியன் தற்காலிக வதிவிட உரிமையாளர்கள் கனடாவில் வசித்து வருவதாகவும் இது மொத்த சனத்தொகையின் 6.8 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.