பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய தகவல்
பிரித்தானியாவில் “999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் வேறு எந்த நபரையும் தேடவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்
செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில் சேனல் 4 தொலைக்காட்சியின் “999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்” என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இறந்த பாராமெடிக்கல் பணியாளர் 24 வயதான டேனியல் டஃபீல்ட்(Daniel Duffield) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பாராமெடிக்கல் பணியாளர்கள் சந்திக்கும் அன்றாட சவால்களையும், அவர்களின் சேவையின் முக்கியத்துவத்தையும் படம் பிடித்துக் காட்டிய “999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரவலாக அறியப்பட்டவர்.
முறையான அடையாளம் இன்னும் நடைபெற வேண்டியுள்ள நிலையில், 24 வயதான டேனியல் டஃபீல்ட் உடன் இறந்து கிடந்த பெண், அதே தொடரில் நடித்த Bridgend பகுதியை சேர்ந்த லாரன் எவன்ஸ்(Lauren Evans,22) என நம்பப்படுகிறது.
வேறு யாரையும் தேடவில்லை
இந்நிலையில் கொலை விசாரணையை தொடங்கிய பொலிஸார், இந்த இறப்பு சம்பவத்தில் வேறு எந்த நபரையும் தேடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் டேனியல் டஃபீல்ட் மற்றும் லாரன் எவன்ஸ் ஆகியோரின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு விசாரணையால் தீர்மானிக்கப்படும்.
பொலிஸார் பொதுமக்களை ஊகங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.