பரீட்சை வினாத்தாளுக்கு வித்தியாசமாக பதிலளித்த மாணவன்! இணையத்தில் வைரல்
மாணவர் ஒருவர் தன்னுடைய பரீட்சை வினாத்தாளுக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ள சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உயிரியல் பரீட்சை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த மாணவன் அவ்வாறு செய்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பரீட்சையில் இதயம் பற்றிய வரைபடம் ஒன்றை வரைந்து, அதன் பாகங்களை குறிக்கும் படி கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
குறித்த மாணவன் இதயத்தின் உள் பாகங்களான ஏட்ரியம் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுவதற்கு பதிலாக, பிரியா, ரூபா, பூஜா, நமீதா மற்றும் ஹரிதா என மாணவரின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பெண்களின் பெயருக்கும் அவர்களின குணாதியங்கள் பழகியவிதம் கொண்டு வரைவிலக்கணமும் தந்து எழுதியுள்ளார்.
பிரியா – இன்டாவில் அவருடன் தொடர்ந்து செட்டில் ஈடுபடுபவர் எனவும் ரூபாவை அழகானவர் மற்றும் ஸ்நாப்செட்டில் பேசுபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நமீதா – (இதயத்தில் சிறிய இடமே ஒதுக்கப்பட்டுள்ளது) அவர் மிக நீண்ட கூந்தல் மற்றும் பெரிய கண்களை உடையவள் எனவும் பூஜாவை முன்னாள் காதலி எனவும் அழுகைக்கு சொந்தக்காரி என குறிப்பிட்டு அழும் கண்களையும் அவர் சிறிதாக வரைந்துள்ளார்.
ஹரிதா என்னுடைய வகுப்பு தோழி என சித்திரத்தை நிறைவு செய்திருக்கிறார். இருப்பினும், ஆசிரியை இதற்கு பதிலாக, சரி உன்னுடைய பெற்றோரை அழைத்து வா என தெரிவித்து, 10-க்கு பூஜ்யம் என மதிப்பெண் வழங்கியுள்ளார்.
குறித்த இன்ஸ்டா பதிவை பதிவை 6.43 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
மாணவனின் இந்த செயலுக்கு நெட்டீசன்களும் பல வகைகளில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருவதுடன் நகைச்சுவை போக்காக இதை பதிர்ந்து வருகின்றனர்.