மலையக வீரர்களால் இலங்கைக்கு 8 பதக்கங்கள்
சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 8 பதக்கங்களை மலையக வீரர்கள் வென்றுள்ளனர்..
சிங்கப்பூர் கோவான் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 22,23 திகதியன்று நடைபெற்று முடிந்த சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பாகவும் பங்குற்றிய மலையகத்தை சேர்ந்த பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் மற்றும் இராகலை மெய்யப்பன் சசிகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து மொத்தமாக எட்டு பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர்.
13 நாடுகள் பங்குபற்றிய இவ் போட்டியில் இலங்கையிலிருந்து 44 வீரர்கள் பங்குகொண்டிருந்தனர்.
இதில் மலையகத்திலிருந்து சென்ற மெய்யப்பன் சசிக்குமார் 1500 மீற்றர், 800 மீற்றர் மற்றும் 80 மீற்றர் தடைத்தாண்டல் போட்டிகளில் 3 முதலாமிடம் பெற்று 3 தங்கப்பதக்கங்களையும் 4×100 அஞ்சலோட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.
அதேபோல துரைசாமி விஜிந்த் சுற்றியெரிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் ,4×400 அஞ்சலோட்ட போட்டியில் முதலாமிடத்துடன் தங்கப்பதக்கத்தையும் ,நீளம் பாய்தல்,உயரம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
மொத்தமாக 5 தங்கப்பதக்கங்கள்,3 வெள்ளி பதக்கங்களையும் வென்று நேற்று மாலை நாடு திரும்பியதோடு மலையகத்திற்கும் பெருமை தேடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.