12 -ம் வகுப்பு படித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர்.., அம்பலமான உண்மை
அரசு மருத்துவமனையில் 7 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிய போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி மருத்துவர் கைது
இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ரூகேலா அரசு மருத்துவமனையில் 7 மாதங்களாக, ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தியாசராவைச் சேர்ந்த பத்மநாபன் முகி கருவா என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர், அரசு மருத்துவமனையில் ஆள்மாறாட்டம் செய்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார். இதனால், காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவர், ஜார்க்கண்ட் மருத்துவர் ரமேஷ் சந்திர ஜாவின் போலி சான்றிதழை அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் தயாரித்து 7 மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அதிலும், கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் பத்மநாபன் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இதுகுறித்து ரூர்கேலா அரசு மருத்துவமனையின் இயக்குநர் கணேஷ் தாஸ் கூறுகையில், “கடந்த 2019 -ம் ஆண்டில் நுவா கிராமத்தில் உள்ள நோயாளிகளுக்கு போலிச் சான்றிதழ்களைக் காட்டி சிகிச்சை அளித்ததற்காக பத்மநாபன் கைது செய்யப்பட்டார்” என்றார்.