சீன அதிபரை சந்தித்த மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சீன அதிபர் ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பான காணொளியொன்று எக்ஸ் (x) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன் படி, சீன தலைநகர் பீஜிங்கில் சகவாழ்வு கோட்பாடுகளின 70 ஆண்டு நிறைவு மாநாட்டில் கலந்து கொண்ட போதே மகிந்த சீன அதிபரை சந்தித்துள்ளார்.
Former President of #SriLanka, @PresRajapaksa met Chinese President Xi Jinping during the opening ceremony of the 70th Anniversary of the Five Principles of Peaceful Coexistence in Beijing, #China. 🇱🇰 🇨🇳
🎥 @CCTV_Plus pic.twitter.com/WGzpk0fQqH
— Kamila Dias (@KamilaWDias) June 29, 2024
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்
சீன வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த வியாழக்கிழமை (27) மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன் படி, இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.