வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது
நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட சில தங்க ஆபரணங்கள், வாள், மோட்டார் சைக்கிள் மற்றும் கைக்குண்டு போன்றவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
சில காலமாக மரதகஹமுல துனகஹாவை சுற்றியுள்ள கிராமங்களில் வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க ஆபரணங்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இதன்படி, பாலியபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தங்கச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓடிய மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற காவல்துறை குழு, படல்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹொரகண்டவில பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி கவிழ்ந்தது.
மக்களின் உதவியுடன் பிடிபட்ட கொள்ளையர்கள்
அதன்போது, பிரதேச மக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் மீரிகம ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், ஜா அல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.