;
Athirady Tamil News

தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி : தீவிர தேடுதலில் காவல்துறை

0

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த இஸ்ரேலிய(israel) யுவதி கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ளநிலையில் உப்புவெளி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

25 வயதான தாமர் அமிதாய் என்ற இளம் யுவதியே காணாமற் போனவராவார்.

கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு வந்த அவர், திருகோணமலை(trincomale) பகுதியில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார்.

விடுதிக்கு திரும்பவில்லை
அவர் ஒன்லைனில் விருந்தினர் விடுதிக்கான முன்பதிவு செய்து திருகோணமலையில் உள்ள றொலக்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த புதன்கிழமை (26) முதல் விடுதிக்கு திரும்பவில்லை என்றும் விருந்தினர் விடுதி உரிமையாளர் கூறினார்.

இது குறித்து விருந்தினர் விடுதி உரிமையாளர் உப்புவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) தெரிவித்தார்.

அமிதாய் தனது உடமைகளை விடுதியில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள்
மேக்னஸ் இன்டர்நஷனல் சேர்ச் அண்ட் ரெஸ்க்யூ,(Magnus International Search and Rescue) சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய எந்த தகவலையும் தேடி ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளது. தகவல் தெரிந்தவர்கள் +972508899698 (WhatsApp) அல்லது [email protected] ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.