உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்
உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி நேற்று முன் தினம் (28) ஆரம்பமானது.
ரிம் ஆஃப் தி பசுபிக் கடற்படைப் பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராணுவ பயிற்சி ஓகஸ்ட் மாதம் வரை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் என கூறப்படுகிறது.
இராணுவப் பயிற்சி
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சர்ச்சைக்குரிய மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஹவாயில் இந்த இராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது.
இதேவேளை, தென் கொரியா, ஜப்பான், இந்தியா, கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் இந்த கடற்படை போர் பயிற்சியில் பங்கேற்கின்றன.