550ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! சுகாதார அவசர நிலை அறிவிப்பு.. மேலும் உயரலாம் என அச்சம்
பாகிஸ்தானில் கடுமையான வெப்ப அலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 550ஐ தண்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வெப்பநிலை
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கடுமையான வெப்பம் கொளுத்துகிறது. பல மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிந்து மாகாணத்தைப் பொறுத்தவரை 50 டிகிரி செல்ஸியஸ் வெயில் கொளுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு பாகிஸ்தான் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானோர் எண்ணிக்கை
அதிக வெப்பம் காரணமாக 450 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், பலர் சிகிச்சையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.