;
Athirady Tamil News

சூயிங்கம் நிறுவனத்துக்கெதிராக ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்கு: விவரம் செய்திக்குள்

0

ஜேர்மனியில், சூயிங்கம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூயிங்கம் நிறுவனத்துக்கெதிராக வழக்கு
ஜேர்மனியின் இனிப்புகள் தயாரிப்பு நிறுவனமான Katjes என்னும் நிறுவனம், தனது தயாரிப்புகள் சுற்றுச்சுழலுக்கு உகந்த தயாரிப்புகள் என விளம்பரம் செய்திருந்தது.

உண்மையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சூயிங்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று கூற இயலாது.

ஆனால், அந்த நிறுவன தயாரிப்புகளால் வெளியாகும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களை ஈடு செய்யும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களுக்கு அந்நிறுவனம் ஆதரவு அளித்துவருகிறது, அவ்வளவுதான்.

ஆனால், தனது தயாரிப்புகள் சுற்றுச்சுழலுக்கு உகந்த தயாரிப்புகள் என அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

இதுபோல, மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்காக தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் அரசு அமைப்பு ஒன்று, Katjes நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடுத்திருந்தது.

வழக்கை விசாரித்த Karlsruhe நகர பெடரல் நீதிமன்றம், தங்கள் தயாரிப்புகள் எதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை விளக்காமல், அப்படி விளம்பரம் செய்யக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.