என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது… இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்
இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய பிரதமர் ரிஷியை, எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் ஒருவர் இனரீதியாகவும், மோசமான வர்த்தைகளாலும் விமர்சித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி
பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமடைந்துள்ள நிலையில், Reform UK கட்சிக்காக பிரச்சாரம் செய்த ஆண்ட்ரூ பார்க்கர் என்னும் நபர், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை, இன ரீதியாகவும், ஆபாச வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார்.
தன் இரண்டு மகள்களும் தன்னைக் குறித்த அந்த மோசமான விமர்சனத்தைக் கேட்க நேர்ந்ததால், தான் மனதில் காயப்பட்டுள்ளதாகவும், கோபமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரிஷி.
ஒருவர் கைது
ரிஷியை ஆபாசமாக விமர்சித்த, Hertfordshireஐச் சேர்ந்த ஆண்ட்ரூ பார்க்கர் என்னும் 60 வயதுகளிலிருக்கும் நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அந்த நபர் பிரதமர் ரிஷியை விமர்சிக்கும் காட்சிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியாகின. அத்துடன், அந்த நபர் இஸ்லாமியர்களைக் குறித்தும், புலம்பெயர்வோரைக் குறித்தும் மோசமாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், பிரதமராக இருக்கும் ஒருவரே இனரீதியாக விமரிக்கப்பட்டுள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.