திருடிய இடத்தில் கடிதம் எழுதி வைத்ததால் சிக்கிய கள்வன்
சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்-டாப் திருட்டு போனது. அலுவலகத்திற்குள் நுழைந்து அவற்றை திருடிய கொள்ளையன் புறப்படும் போது குறிப்பு ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார்.
அதில், ‘டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்-டாப்பை எடுத்துக் கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து நான் எல்லா போன்களையும், லேப்-டாப்களையும் எடுக்கவில்லை.
உங்களின் லேப்-டாப் மற்றும் போன் வேண்டுமானால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஒரு எண்ணையும் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி சில மணி நேரங்களிலேயே அந்த திருடனை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பயனர்கள் சிலர், ‘நல்ல திருடன்’ என பதிவிட்டுள்ளனர்.