கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறந்துவைப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் (Kataragama) ஆலயத்திற்கான காட்டுப் பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று (30) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) இன்று (30) காலை 6.00 மணியளவில் இந்தப் பாதை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான அடியார்கள்
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Tennakoon) கலந்து கொண்டார்.
இம்முறை சுமார் 4000 க்கு மேற்பட்ட அடியார்கள் முதல் தடவையாக முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இந்த மிகநீண்ட பாதயாத்திரை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.