;
Athirady Tamil News

பிரான்ஸ் தேர்தல்… வரலாறு படைக்கும் நம்பிக்கையில் தீவிர வலதுசாரிகள்

0

தற்கால நவீன பிரான்சில் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றும் பெரும் நம்பிக்கையில் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

National Rally கட்சி ஆதிக்கம்
பிரான்சில் ஞாயிறன்று முதல் சுற்று தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. தீவிர வலதுசாரிகளான Marine Le Pen மற்றும் Jordan Bardella ஆகியோரின் National Rally கட்சி இந்த முறை மக்களின் பெரும் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் National Rally கட்சி ஆதிக்கம் செலுத்தியதன் பின்னர், 3 வாரங்களாக தேர்தல் களத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்தே காணப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, பிரான்சின் 49 மில்லியன் வாக்காளர்களில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிலாள் மூலம் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலில் அதிக வாக்குப்பதிவுக்கு காரணமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 577 ஆசனங்களுக்கான இந்த தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவதால், ஜூலை 7ம் திகதி நடக்கவிருக்கும் இரண்டாவது சுற்றில் தான் தேர்தலின் போக்கு தெரியவரும் என்றே கூறப்படுகிறது.

மேலும், வெறும் 20 நாட்களே பரப்புரைக்கு ஒதுக்கப்பட்டதும் National Rally கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் National Rally கட்சி முன்வைத்த வாக்குறுதிகளும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஞாயிறன்று நடக்கும் முதல் சுற்றில் பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்ற National Rally கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த கட்சியின் Jordan Bardella பிரதமராக பொறுப்பேற்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் தங்கள் கட்சி 289 ஆசனங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாக Jordan Bardella தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று மாலை முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். பிரான்சில் முன்னர் நடந்த தேர்தல்களில், தீவிர வலதுசாரிகளை ஒதுக்கி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்தனர், மக்களும் ஆதரவளித்தனர்.

வருமான வரியில் இருந்து விலக்கு
ஆனால் National Rally கட்சியின் தலைவர்கள் பல ஆண்டுகளாக மக்களிடையே பணியாற்றி தங்கள் மீதிருக்கும் தீவிர வலதுசாரி பிம்பத்தை உடைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு, குடியிருப்பு மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளையும் National Rally முன்வைத்துள்ளது.

இதனிடையே, இமானுவல் மேக்ரானின் Ensemble alliance கடும் பின்னடைவை சந்திக்கும் என்றே பரவலான கருத்தாக உள்ளது. பிரதமராக Gabriel Attal-ன் நாட்கள் எண்ணப்பட்டாலும், பிரான்சில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி அவர் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மேக்ரானின் கூட்டணி கட்சியினரே, அவரது திடீர் தேர்தல் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதிருப்தியிலும் உள்ளனர். இதனிடையே, இரண்டாம் சுற்று தேர்தலை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சமும் மக்களிடையே தீயாக பரவியுள்ளது.

உள்விவகார அமைச்சரின் எச்சரிக்கையை அடுத்து பொலிஸ் மற்றும் இராணுவம் ஏற்கனவே ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.