;
Athirady Tamil News

பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு முன் கோவிலில் வழிபட்ட ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி

0

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள நீஸ்டன் கோயிலுக்குச் (Neasden Temple) சென்று வழிபட்டனர்.

பிரித்தானிய பொதுத்தேர்தல் ஜூலை 4-ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இருவரும் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

சுனக்கின் கான்வாய் கோவில் வளாகத்தை அடைந்தவுடன், அவருக்கு கூட்டத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோயிலுக்குச் சென்ற அவர், அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். சுனக் நீஸ்டன் கோயிலிலும் மக்களிடம் உரையாற்றினார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், தனது உரையை தொடங்கிய சுனக், இன்று நீங்கள் கிரிக்கெட் போட்டியின் முடிவுகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று தொடன்கினார். இதனைக் கேட்டு மக்கள் கைதட்டினர்.

தொடர்ந்து பேசிய சுனக், “நானும் உங்களைப் போன்ற ஒரு இந்துதான். என் நம்பிக்கையும் உறுதியும் எனக்கு வலிமையைத் தருகிறது. நான் எம்.பி. ஆனபோது, ​​பகவத் கீதையில் கைவைத்து சத்தியம் செய்தேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

என் நம்பிக்கை எனக்குக் கற்றுக்கொடுக்கிறது. நமது செயல்களில் கவனம் செலுத்தவும், விளைவுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை” என்று கூறினார்.

கோவிலுக்குச் சென்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர்
ரிஷி சுனக்கிற்கு ஒரு நாள் முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான சர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் பல குழந்தைகளுடன் உரையாடியதோடு பூஜையிலும் கலந்து கொண்டார். மேலும், சுவாமி சிலைக்கு அபிஷேக ஆராதனை செய்தார்.

ஸ்டார்மர் தனது உரையில், கிங்ஸ்பரி கோயிலை இரக்கத்தின் சின்னம் என்று கூறினார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது அரசாங்கம் பிரிட்டிஷ் இந்திய சமூகத்திற்காக வேலை செய்யும் என்று கூறினார்.

மேலும் பிரித்தானியாவில் ஹிந்துபோபியாவுக்கு இடமில்லை. நாட்டை பிளவுபடுத்தவோ அல்லது உடைக்கவோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.