கனடாவில் இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில்(Canada) இடம்பெற்று வரும்நூதன மோசடி சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதால் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
வாடகை விடுதிகள்
இந்நிலையில் இணையத்தின் ஊடாக விடுதிகள் பதிவு செய்யும் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த விலையில் விடுதிகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி விளம்பரம் செய்து இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒன்றாரியோவைச்(Ontario) சேர்ந்த ஹோமா அஷ்ராபோஃர் என்ற பெண் முகநூல் விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் விடுதி ஒன்றை முன்பதிவு செய்த போதே ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது அவர் முற்பணமாக வைப்பு செய்த ஆயிரம் டொலர் பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.