;
Athirady Tamil News

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள ‘Glocal Fair – 2024’ தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

0

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள ‘Glocal Fair – 2024’ நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம்(01) காலை 10.30மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

Glocal Fair – 2024 நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது ‘Glocal Fair – 2024’ நிகழ்வுக்கு செய்ய வேண்டிய ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் அதற்குறிய பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும், உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு வழங்குநர்களையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதே இந் நிகழ்வின் நோக்கமாகும்.

மேலும் அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள், தொழிலாளர்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரி பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு இப்பகுதி மக்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.