தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா? ஊடகவியலாளர்கள் கேள்விக்கு ரிஷி பதில்
தேர்தலுக்குப் பின்பும் நீங்கள் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் என பதிலளித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா?
பிரித்தானியாவில், வியாழக்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாமே, லேபர் கட்சி மகத்தான வெற்றியைப் பெறும், அக்கட்சியின் தலைவரான Keir Starmer பிரதமராவார் என்றுகூறியுள்ளன.
இந்நிலையில், நீங்கள் தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா என பிரதமர் ரிஷியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ரிஷி, கன்சர்வேட்டிவ் கட்சி 14 ஆண்டுகாலம் பிரித்தானியாவில் சிறப்புற ஆட்சி புரிந்ததாகவும், 2010ல் தங்கள் கட்சி பதவிக்கு வந்தபோது இருந்ததை விட இப்போது நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
ஆம், நான் மிகவும் கடினமாகப் போராடி வருகிறேன் என்று கூறிய ரிஷி, லேபர் கட்சி ஆட்சிக்கு வருவது எத்தகைய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.