;
Athirady Tamil News

வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்… சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள்

0

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேராதவர்கள் சுவிட்சர்லாந்தில் அதிக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உலகறிந்த விடயம்.

என்றாலும், பணம் வருகிறது என்றால், விதிகளை நெகிழ்த்த அந்நாடும் தயாராகவே உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வழங்கும் golden visaவிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள்
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கெதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அந்த சட்டத்திலேயே, பெடரல் வெளிநாட்டவர்கள் சட்டத்தில் 30ஆவது பிரிவு, பணக்காரர்களுக்கு ஆதரவாக ஒரு விதிவிலக்கைக் கொண்டுள்ளது.

அந்த விதியின்படி, ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வேலையே செய்யாமல் வாழ, வழிவகை செய்கிறது.

ஒரே ஒரு நிபந்தனைதான், அவர்கள் தங்களுக்கான அனைத்துத் தேவைகளையும் சந்திக்கும் அளவுக்கு பணக்காரகளாக இருக்கவேண்டும்! அப்படிப்பட்ட பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்படும் விசாதான் தங்க விசா என அழைக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் பணக்காரர்கள் என்பதன் பொருள் என்ன?
வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்… சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள் | Switzerland S Golden Visas

அதாவது, வேலையே செய்யாமல், எக்காரணம் கொண்டும் அரசின் உதவியையும் நாடாமல் சுவிட்சர்லாந்தில் வாழ விரும்புவோர், சுவிஸ் அரசுக்கு வரி செலுத்தவேண்டும்.

வரி என்றால் சின்னத் தொகை அல்ல! ஜெனீவாவைப் பொருத்தவரை இந்த வரி, ஆண்டொன்றிற்கு சுமார் 312,522 சுவிஸ் ஃப்ராங்குகள்.

Vaud மாகாணமென்றால் இந்த வரி, 415,000 சுவிஸ் ஃப்ராங்குகள், Valais மாகாணமென்றால் 287,882சுவிஸ் ஃப்ராங்குகள்.

இதுபோக வேறு சில கட்டணங்களும் உண்டு, கூடவே, நீங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களாகவும் இருக்கக்கூடாது. அப்படியென்றால், நீங்கள் சுவிட்சர்லாந்தில் வேலையே செய்யாமல், உங்கள் பணத்தில், சந்தோஷமாக வாழலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.