;
Athirady Tamil News

சோதனையின் போது விபத்துக்குள்ளான சீன ராக்கெட்

0

சீன (China) தனியார் நிறுவனமொன்றின் டியான்லாங் – 3 எனப்படும் ராக்கெட்டானது (ஏவூர்தி) முதல் கட்டமைப்பு சோதனையின் போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது, நேற்று முன் தினம் (30.06.2024) இடம்பெற்றுள்ளது.

சீனாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமொன்றின் டியான்லாங் – 3 (Tianlong-3) என பெயரிடப்பட்டுள்ள ராக்கெட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இணைப்புக் கோளாறு
இதன்போது, ராக்கெட் பொறுத்தி வைக்கப்பட்டிருந்த தளத்திற்கும் ராக்கெட்டிற்கும் இடையில் ஏற்பட்ட இணைப்புக் கோளாறு காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ராக்கெட் தீப்பற்றிய நிலையில், சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் விழுந்துள்ளது.

அதேவேளை, இந்த சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.