;
Athirady Tamil News

ஸ்பெயின் தீவுக்கு சென்று இதுவரை மாயமான பிரித்தானியர்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

0

ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சென்று, இதுவரை எத்தனை பேர்கள் மாயமாகியுள்ளனர் என்ற கேள்வி பிரித்தானியாவில் பரவலாக எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக மாயமானவர்கள்
பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 19 வயது Jay Slater கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாயமான நிலையில், இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அங்குள்ள பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால் Tenerife தீவுக்கு சென்று, இன்னும் பல ஆண்டுகளாக மாயமானவர்கள் தொடர்பில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. லண்டனை சேர்ந்த 18 வயதேயான Billy Bennett கடந்த 1985, டிசம்பர் 1ம் திகதி முதல் மாயமாகியுள்ளார்.

தம்மிடம் இருந்த மொத்த பணத்தையும் தொலைத்த நிலையில், தங்க இடமின்றி, அவர் மாயமானதாக கூறப்படுகிறது. 1987ல் லண்டனை சேர்ந்த 23 வயது Ricky D’Cotta அக்டோபர் மாதம் Tenerife தீவில் மாயமாகியுள்ளார்.

அவர் மாயமாகியுள்ளதாக பொலிசார் அறிவித்த சில நாட்களில், அவரது கடவுச்சீட்டு உட்பட அவரது பை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

அவர் தொடர்பில் தகவல் இல்லை
2004ல் யூரோ கிண்ணம் களைகட்டிய ஜூன் மாதம் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 24 வயது Kevin Ainley திடீரென்று மாயமானார். அவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாத நிலையில், 2016ல் அவரது சகோதரி தெரிவிக்கையில், தமது சகோதரர் தொடர்பில் யாருக்கோ உண்மை தெரிய வாய்ப்புள்ளது என்றார்.

2019 மார்ச் மாதம் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய Peter Wilson என்பவரின் சடலத்தை மீட்க நீண்ட இரண்டு வருடங்களானதாக கூறப்படுகிறது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் டாக்ஸி ஒன்றில் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார்.

அவரது உடமைகள் அனைத்தும் ஹொட்டல் அறையில் காணப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பில் விளக்கமேதும் இல்லை.

ஸ்பெயினின் Balearic தீவில் 2020 ஜனவரி மாதம் Ben Garland மாயமாகியுள்ளார். இதுவரை அவர் தொடர்பில் தகவல் இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Ryan Cooney என்ற அயர்லாந்து நாட்டவர் Tenerife தீவில் இருந்து மாயமாகியுள்ளார். இதுவரை தகவல் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.