சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து சமாதி கட்டிய உறவினர்கள்
பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து உறவினர்கள் சமாதி கட்டியுள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையை அழைத்தனர்.
பின்னர், மக்கள் உதவியுடன் சுவரை உடைத்து தாயையும் மகளையும் பொலிஸார் காப்பாற்றினர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, பெண்ணை வலுக்கட்டாயமாக உள்ளே வைத்து சுவர் எழுப்பியவர் அவரது மைத்துனர், அவரது பெயர் சோஹைல்.
அண்ணி சுவரை உடைத்து விடுவார்களோ என்று பயந்த சோஹைல், சிமென்ட் மற்றும் செங்கற்களால் ஆன சுவரைப் பலமாக கட்டியுள்ளார் என கூறப்படுகிறது.
சொஹைல் பல ஆண்டுகளாக சொத்துக்காக தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சோஹைலின் மகனும் மனைவியும் தன்னைத் தாக்கியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து வீட்டின் சொத்து ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதுகுறித்து தஸ்லிம் பொலிசாரிடம் கூறுகையில், தனது கணவர் அப்துல் ஹக் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அ வர் தனது மகளுடன் வீட்டின் நடுப்பகுதியில் வசித்து வந்ததாகவும், சோஹைல் முழு வீட்டையும் கைப்பற்ற விரும்பியதாகவும் கூறினார்.
முதலில் சோஹைல் தஸ்லீமிடம் வீட்டில் இருந்த மற்ற முக்கிய பொருட்களை பறித்துள்ளார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மதியம், அவரது மனைவி சைமா மற்றும் அவரது மைத்துனர் வாசிம் ஆகியோர், தஸ்லீம் மற்றும் அவரது மகளை தள்ளி அறையில் அடைத்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் வெளியே வராதபடி சுவரை கட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் பொதுமக்களிடம் உறுதியளித்தனர். ஆனால், பொலிஸாரால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.