;
Athirady Tamil News

பெண் உடல்களை உண்ணும் பழங்குடியினத்தவர்கள்: உண்ணாமல் விடும் ஒரே உறுப்பு

0

இறந்த தங்கள் உறவினர்களாகிய பெண்களின் உடல்களை உண்ணும் வழக்கம் கொண்ட பழங்குடியினம் ஒன்றைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழக்குடி இனத்தாரிடையே பரவிய நோய்
1950களில், Papua New Guinea நாட்டிலுள்ள Okapa என்னும் பகுதியில் வழ்ந்துவந்த Fore இன பழங்குடியின பெண்களிடையே, kuru என்னும் நரம்பு மண்டல நோய் பரவத்துவங்கியுள்ளது.

இந்த நோய் குறித்து ஆய்வு செய்யச் சென்ற Shirley Lindenbaum என்னும் ஆய்வாளர் அந்த பழங்குடியின மக்களை விசாரிக்கும்போது, இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், இறந்தவர்களின் உடல்களை நாங்களே உண்டுவிடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

உண்ணப்படாத ஒரே ஒரு உறுப்பு

அதாவது, இறந்த தங்கள் உறவினர்களாகிய பெண்களின் உடல்களை உண்ணுவது, Fore இன பழங்குடியின பெண்களிடையே, இறந்தவர்களுக்குச் செய்யும் கௌரவமாக கருதப்படுகிறது. ஆண்கள் யாரும் மனிதர்களை உண்ணுவதில்லை!

உடலிலுள்ள பித்தப்பை தவிர மீதமுள்ள அனைத்து உறுப்புகளையும் உண்டுவிடுவார்களாம் இந்த Fore இன பெண்கள். பித்தப்பை சாப்பிட முடியாத அளவுக்கு கசப்பாக இருப்பதால், அதை மட்டும் சாப்பிடாமல் விட்டுவிடுவார்களாம்.

ஆக, இறந்தவர்களில் சிலருடைய நோய் தொற்றிய மூளையை உண்பதாலேயே, Fore இன மக்களுக்கு kuru என்னும் நரம்பு மண்டல நோய் பரவத்துவங்கியுள்ளதைக் கண்டறிந்துள்ளார் ஆய்வாளரான Shirley Lindenbaum.

ஆனால், இப்படி சக மனிதர்களை உண்ணும் வழக்கம் 1960களில் முடிவுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.