;
Athirady Tamil News

இன்று எரிவாயு விலையில் திருத்தம்!

0

இன்று (2) எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதேவேளை மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.

அதன்போது,12.5 எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 3,790 ரூபாவாக உள்ளது.

மேலும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.